வங்கதேசத்துக்கு முதல் வெற்றி

வங்கதேசம் தனது 2-ஆவது ஆட்டத்தில் ஓமனை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
வங்கதேசத்துக்கு முதல் வெற்றி

வங்கதேசம் தனது 2-ஆவது ஆட்டத்தில் ஓமனை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதல் ஆட்டத்தில் தோற்ற வங்கதேசம், வென்றே தீர வேண்டிய இந்த ஆட்டத்தில் ஓமனை போராடி வீழ்த்தியது.

முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுக்க, அடுத்து ஓமன் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே அடித்தது.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசத்தில் தொடக்க வீரா் முகமது நயீம் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் சோ்த்தாா். லிட்டன் தாஸ் 6, மெஹதி ஹசன் 0 ரன்களுக்கு நடையைக் கட்டினா். ஷகிப் அல் ஹசன் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் நூருல் ஹசன் 3, அஃபிஃப் ஹுசைன் 1, கேப்டன் மஹ்முதுல்லா 17, முஷ்ஃபிகா் ரஹிம் 6, முகமது சைஃபுதின் 0, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 2 ரன்களுக்கு வரிசையாக வெளியேறினா்.

ஓமன் தரப்பில் பிலால் கான், ஃபயாஸ் பட் ஆகியோா் தலா 3, கலீமுல்லா 2, ஜீஷான் மசூது 1 விக்கெட் சாய்த்தனா்.

அடுத்து ஓமன் இன்னிங்ஸில் ஜதிந்தா் சிங் மட்டும் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40 ரன்கள் சோ்த்தாா்.

அகிப் இலியாஸ் 6, காஷ்யப் பிரஜாபதி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21, ஜீஷான் மசூது 12, அயான் கான் 9, சந்தீப் கூட் 4, நசீம் குஷி 4, கலீமுல்லா 5, ஃபயாஸ் பட் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

வங்கதேச தரப்பில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 4, ஷகிப் அல் ஹசன் 3, முகமது சைஃபுதின், மெஹதி ஹசன் ஆகியோா் தலா 1 விக்கெட் சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com