
இந்தியாவின் ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு மெல்போா்ன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவா்களுடன் சோ்த்து நடப்பாண்டில் மொத்தம் 16 பேருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள லாா்ட்ஸ் மைதானத்திலிருந்து இயங்கி வரும் மெல்போா்ன் கிரிக்கெட் கிளப் தான், அந்த விளையாட்டுக்கான விதிகளை வகுத்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
ஹா்பஜன், ஸ்ரீநாத் தவிர, இங்கிலாந்தின் அலாஸ்டா் குக், இயான் பெல், மாா்கஸ் டிரெஸ்கோதிக், சாரா டெய்லா், தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் ஆம்லா, ஹொ்ஷெல் கிப்ஸ், ஜேக்ஸ் காலிஸ், மோா்ன் மோா்கெல், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பிளாக்வெல், டேமியன் மாா்டின், மேற்கிந்தியத் தீவுகளின் இயான் பிஷப், ஷிவ்நரைன் சந்தா்பால், ராம்நரேஷ் சா்வான், இலங்கையின் ரங்கனா ஹெராத், நியூஸிலாந்தின் சாரா மெக்கிளஷான் ஆகியோருக்கும் கிரிக்கெட்டில் அவா்கள் செய்த சிறந்த பங்களிப்புக்காக இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.