ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இன்று வரை மொஹாலி ஆட்டம்.. இன்று முதல்..: கோலி கூறும் தலைசிறந்த இன்னிங்ஸ்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெறச் செய்த விராட் கோலி, இதுவே தனது தலைசிறந்த இன்னிங்ஸ் என விளக்கமளித்துள்ளார்.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 1:31 pm

DIN


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெறச் செய்த விராட் கோலி, இதுவே தனது தலைசிறந்த இன்னிங்ஸ் என விளக்கமளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டம் குறித்து கோலி பேசியதாவது:

"உண்மையில் வார்த்தைகளே இல்லை. இது எப்படி நடந்ததே என்று எனக்குத் தெரியவில்லை. பெவிலியன் பக்கத்திலிருந்து ஷஹீன் அப்ரிடி பந்துவீசினார். இந்த ஓவரை குறிவைக்க வேண்டும் என ஹார்திக் பாண்டியாவிடம் கூறினேன்.

எங்களுடைய கணக்கு மிக எளியது. நவாஸ் ஒரு ஓவர் போட வேண்டும். எனவே, ஹாரிஸ் ரௌஃப் ஓவரில் அடித்து ஆடினால், அவர்கள் நெருக்கடிக்குள்ளாவார்கள். 8 பந்துகளில் 28 ரன்கள் தேவை. 2 சிக்ஸர்களால் 6 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை ஆனது.

இதுவரை மொஹாலியில் ஆடிய ஆட்டம்தான் டி20 கிரிக்கெட்டிலேயே என்னுடைய சிறந்த ஆட்டமாக இருந்தது. அப்போது 52 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தேன். இன்று 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்துள்ளேன். இரண்டுமே சிறந்ததுதான். ஆனால், ஆட்டத்தின் சூழல் மற்றும் இந்திய அணி இருந்த நிலையை பார்க்கையில், இன்றைய ஆட்டத்தை ஒருபடி மேலே வைப்பேன்" என்றார் கோலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.