பயிற்சியாளராக விராட் கோலிக்கு ராகுல் டிராவிட் கொடுத்த கடைசி வேலை என்ன தெரியுமா?

தலைமைப் பயிற்சியாளர் பதவிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவதற்கு முன்பு விராட் கோலிக்கு, இதனையும் செய்துவிடுங்கள் என பணி ஒன்றை கொடுத்துள்ளார்.
பயிற்சியாளராக விராட் கோலிக்கு ராகுல் டிராவிட் கொடுத்த கடைசி வேலை என்ன தெரியுமா?
படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

தலைமைப் பயிற்சியாளர் பதவிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவதற்கு முன்பு விராட் கோலிக்கு, இதனையும் செய்துவிடுங்கள் என பணி ஒன்றை கொடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 2-வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பயிற்சியாளராக விராட் கோலிக்கு ராகுல் டிராவிட் கொடுத்த கடைசி வேலை என்ன தெரியுமா?
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய கௌதம் கம்பீர்!

இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவதற்கு முன்பு விராட் கோலிக்கு, இதனையும் செய்துவிடுங்கள் என பணி ஒன்றை கொடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்படம் | ஐசிசி

இது தொடர்பாக ஐசிசி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோவில் ராகுல் டிராவிட் பேசியதாவது: ஐசிசி நடத்தும் மூன்று வெள்ளைப் பந்து தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டீர்கள். இன்னும் சிவப்பு பந்து தொடரில் (ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்) ஒரே ஒரு கோப்பை மட்டும் மீதமிருக்கிறது. அதனையும் வென்றுவிடுங்கள் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மூன்று வெள்ளைப் பந்து தொடர்கள் என ராகுல் டிராவிட், டி20 உலகக் கோப்பை 2024, ஒருநாள் உலகக் கோப்பை 2011 மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி 2013 ஆகிய மூன்று தொடர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியபோது, விராட் கோலி அணியில் ஒரு வீரராக அங்கம் வகித்துள்ளார்.

பயிற்சியாளராக விராட் கோலிக்கு ராகுல் டிராவிட் கொடுத்த கடைசி வேலை என்ன தெரியுமா?
பாகிஸ்தான் வீரர்களின் பாராட்டு மழையில் ரோஹித் சர்மா, விராட் கோலி!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இருமுறை முன்னேறிய இந்திய அணி, முதல் முறை நியூசிலாந்திடமும், இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு லார்ட்ஸில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com