ரோஹித் சர்மா தலைமையில் மேலும் 2 ஐசிசி கோப்பைகளை வெல்வோம்; ஜெய் ஷா நம்பிக்கை!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேலும் இரண்டு ஐசிசி கோப்பைகளை வெல்லும் என்ற நம்பிக்கையிருப்பதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையில் மேலும் 2 ஐசிசி கோப்பைகளை வெல்வோம்; ஜெய் ஷா நம்பிக்கை!
படம் | பிசிசிஐ

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேலும் இரண்டு ஐசிசி கோப்பைகளை வெல்லும் என்ற நம்பிக்கையிருப்பதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி நடத்தும் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று, இந்திய அணியின் கோப்பைக்கான தேடலை முடிவுக்கு கொண்டு வந்தது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

ரோஹித் சர்மா தலைமையில் மேலும் 2 ஐசிசி கோப்பைகளை வெல்வோம்; ஜெய் ஷா நம்பிக்கை!
பயிற்சியாளராக ரோஹித் சர்மாவிடம் எதையும் மாற்ற முயற்சிக்கவில்லை: ராகுல் டிராவிட்

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தபோதிலும், இவர்கள் மூவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடவுள்ளனர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்ந்து வழிநடத்தவுள்ளார்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராஃபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்கான அடுத்த இலக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி. ரோஹித் சர்மாவின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த இரண்டு ஐசிசி தொடர்களிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ரோஹித் சர்மா தலைமையில் மேலும் 2 ஐசிசி கோப்பைகளை வெல்வோம்; ஜெய் ஷா நம்பிக்கை!
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தோனி: வைரல் விடியோ!

டி20 உலகக் கோப்பை வெற்றியை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு சமர்பிக்க விரும்புகிறேன். கடந்த ஆண்டிலிருந்து இது நம்முடைய மூன்றாவது இறுதிப்போட்டி. கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தோம்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தோம். இதயங்களை வென்ற நம்மால் கோப்பையை வெல்ல முடியவில்லை. டி20 உலகக் கோப்பையை வென்று இதயங்களை மட்டுமல்ல, கோப்பையையும் வெல்வோம் எனக் கூறினேன். அது தற்போது நடந்துள்ளது என்றார்.

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com