
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. முதல்முறையாக 20 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன.
தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தினை வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியை எங்கு பார்க்கலாம்?
இடம்: நாசாவ் கவுண்டி நியூயார்க் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
நேரம்: இந்திய நேரப்படி இரவு 8 மணி.
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சிராஜ்.
ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்களுக்கான தெரிவில் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேச அணி:
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), டஸ்கின் அகமது (துணைக் கேப்டன்), லிட்டன் தாஸ், சௌமியா சர்கார், தன்சித் தமீம், ஷகிப் அல் ஹசன், தௌகித் ஹிரிடாய், மஹ்மதுல்லா, ஜேக்கர் அலி, தன்வீர் இஸ்லாம், மஹேதி ஹாசன், ரிஸாத் ஹொசைன், முஸ்தபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் தன்சிம் ஷகிப்.
இந்தியாவுக்கான முதல் டி20 உலகக் கோப்பை போட்டி ஜூன் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.