முதல் போட்டியில் பாட் கம்மின்ஸ் விளையாடாதது ஏன்?

டி20 உலகக் கோப்பையில் ஒருநாள், டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ்படம்: இர்பான் பதான் / எக்ஸ்
Updated on
1 min read

ஓமன்ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற ஓமன் பௌலிங்கினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 164/5 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா சார்பில் வார்னர் 56 ரன்கள், ஸ்டாய்னிஸ் 67 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய ஓமன் அணி 20 ஓவர் முடிவில் 125 /9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. ஆஸி. 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் ஒருநாள், டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

பாட் கம்மின்ஸ்
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லாததற்கு காரணம் இதுதான்: ரிக்கி பாண்டிங்

ஓமன் போன்ற அணிக்கு எதிராக கம்மின்ஸ் விளையாட வேண்டியதில்லை எனவும் முக்கியமான வேகப் பந்து வீச்சாளருக்கு ஓய்வளிக்கும் பொருட்டும் கம்மின்ஸ் விளையாடாமல் இருந்திருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் போட்டி விளையாடியதால் பயிற்சி ஆட்டத்திலும் கம்மின்ஸ் கலந்து கொள்ளவில்லை. தனது உடைமைகளை வரும் வழியில் தொலத்து விட்டதால் கம்மின்ஸை ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில் கம்மின்ஸ் குளிர் பானங்களை வீரர்களுக்கு எடுத்து வரும் செயல்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாட் கம்மின்ஸ்
உலக சாதனை படைத்த 43 வயது உகாண்டா வீரர்!

இதுதான் கலாச்சாரம் எனக் குறிப்பிட்டு இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார். இந்திய அணியில் ஒரு கேப்டன் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com