
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசை டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் என நம்புவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசை டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் என நம்புவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் விளையாடியுள்ள போட்டிகளின் மொத்த எண்ணிக்கை 892 எனத் தெரிவிக்கப்பட்டது. மிகவும் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதனால், இந்திய அணிக்கு அதிக அனுபவம் உள்ளது. அதிலும் குறிப்பாக, பந்துவீச்சில் இந்திய அணி மிகுந்த அனுபவமிக்க அணியாக உள்ளது.
உலகின் நம்பர்.1 பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அணியில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பந்துவீச்சில் அசத்தி வரும் முகமது சிராஜ் அணியில் இருக்கிறார். கடந்த இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இடம்பெற்ற அர்ஷ்தீப் சிங் அணியில் இருக்கிறார். அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.