பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஹார்திக் பாண்டியாவுக்கு சிறப்பானது; ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போவதாக இந்திய அணியின் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியாபடம் | பிசிசிஐ
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போவதாக இந்திய அணியின் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி வெற்றியுடனும், பாகிஸ்தான் தோல்வியுடனும் தொடங்கியுள்ளது. இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், பாகிஸ்தான் அணி அமெரிக்காவுக்கு எதிரான அதன் முதல் போட்டியில் சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த சூழல்களுக்கு நடுவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை மறுநாள் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

ஹார்திக் பாண்டியா
பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போவதாக இந்திய அணியின் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹார்திக் பாண்டியா பேசியதாவது: மிகப் பெரிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எனக்கு உற்சாகமளிப்பதாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி எனக்கு மேலும் சிறப்பானதாக அமைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி சண்டையல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி வரலாற்றில் இடம்பெறப் போகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், அந்த நாள் இந்திய அணிக்கு மற்றுமொரு சிறப்பான நாளாக அமையும் என்றார்.

ஹார்திக் பாண்டியா
பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? அமெரிக்க கேப்டன் பதில்!

பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை ஹார்திக் பாண்டியா 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 6 போட்டிகளில் பேட்டிங்கைக் காட்டிலும், பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த 6 போட்டிகளில் பாண்டியா 84 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரது எகானமி 7.5 ஆக உள்ளது. இந்த 6 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com