பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!
படம் | AP
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!
பரிதாபமான கிரிக்கெட்: பாகிஸ்தானை விமர்சித்த வாசிம் அக்ரம்!

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் ரஸ்டி தெரான் குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது: புதிதாக மாற்றப்பட்ட பந்தை பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தனது கட்டை விரல் நகத்தினால் சேதப்படுத்தியது தெளிவாக தெரிந்தது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என இருக்கப் போகிறோமா? எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் பந்தை சேதப்படுத்தியதாக அமெரிக்க வீரர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானை வீழ்த்தியது எப்படி? அமெரிக்க கேப்டன் பதில்!

நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com