பரிதாபமான கிரிக்கெட்: பாகிஸ்தானை விமர்சித்த வாசிம் அக்ரம்!

முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் தோல்வியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாசிம் அக்ரம்
வாசிம் அக்ரம் படம்: எக்ஸ் / வாசிம் அக்ரம்
Published on
Updated on
1 min read

உலகக் கோப்பை போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தானை சூப்பா் ஓவரில் வீழ்த்தியது அமெரிக்கா. முதலில் ஆடிய பாகிஸ்தான் 159 எடுக்க அடுத்து ஆடிய அமெரிக்காவும் 159 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றியைத் தீா்மானிக்க சூப்பா் ஓவா் நடத்தப்பட்டது. சூப்பா் ஓவரை பாகிஸ்தானின் முகமது அமீா் வீச, அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது.

அமெரிக்கா அணியைச் சேர்ந்த சௌரப் நேத்ரவல்கர் வீசிய ஓவரில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

வாசிம் அக்ரம்
சாப்ட்வேர் என்ஜீனியர் முதல் கிரிக்கெட்டர் வரை: பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் பழிதீர்த்த இந்தியர்!

இந்த தோல்வி குறித்து முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியதாவது:

பரிதாபமான செயல்பாடுகள். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி. ஆனால், கடைசி பந்துவரை நீங்கள் போராட வேண்டும். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மோசமானது. இங்கிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு மிகவும் கடினம். ஏனெனில் அடுத்து இந்தியா, அய்ர்லாந்து, கனடா போன்ற அணிகளுடம் போட்டி இருக்கிறது.

போட்டியின் திருப்புமுனை பாகிஸ்தான் தொடக்கத்திலேயே பல விக்கெட்டுகளை விட்டுவிட்டார்கள். பாபர் அசாம்- ஷதாப் கான் பார்ட்னர்ஷிப்புக்குப் பிறகு யாரும் சரியாக விளையாடவில்லை. மிக மோசமான ஃபீல்டிங், ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானின் சுமாரான ஆட்டம் இது.

வாசிம் அக்ரம்
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லாததற்கு காரணம் இதுதான்: ரிக்கி பாண்டிங்

பாகிஸ்தான் ரசிகர்கள், வீரர்கள் அமெரிக்காவை எளிமையாக வென்று விடலாம் என நினைத்தார்கள். ஆனால் போட்டி போகப்போக அமெரிக்க அசத்தலாக வீளையாடினார்கள். குறிப்பாக அமெரிக்க கேப்டன் அற்புதமான பேட்டிங். சூப்பர் ஓவரில் 19 ரன்கள் என்பது 36 ரன்கள்போல இருந்தது. அமெரிக்க அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணிக்கு வாழ்த்துகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com