
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு எந்த ஒரு காரணமும் கூற விரும்பவில்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்து அணியை 75 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு எந்த ஒரு காரணமும் கூற விரும்பவில்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போட்டிக்கு நன்றாகவே தயார் ஆகியிருந்தோம். அதனால், தோல்விக்கு எந்த ஒரு காரணமும் கூற விரும்பவில்லை. இந்த தோல்வியிலிருந்து நகர்ந்து வேகமாக முன்னேறிச் செல்ல வேண்டும். இன்னும் ஓரிரு நாள்களில் அடுத்த போட்டி இருக்கிறது. அந்த போட்டியில் நன்றாக செயல்பட வேண்டும். மேற்கிந்தியத் தீவுகள் எந்த அளவுக்கு வலிமையான அணி என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.