
நியூயார்க்கில் நடைபெற்ற உலகக் கோப்பையின் 25-ஆவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா - அமெரிக்கா நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்க அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 19-வது ஓவரில் இலக்கை விரட்டிப் பிடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஷிவம் துபே 31 (35), சூர்யகுமார் யாதவ் 50 (49) அடித்து வெற்றிக்கு உதவினார்கள்.
இந்தப் போட்டி குறித்து ஷிவம் துபே கூறியதாவது:
எனது ஃபார்ம் உடன் போராடி வருகிறேன். அதை சரிசெய்யும் தொடர்சியான பணிகளில் இருக்கிறேன். ஆனால் நியூயார்க்கில் விளையாடியது அழுத்தமாகவே இல்லை. பயிற்சியாளர்கள் என்னிடம் கூறியது ‘இங்கு சிக்ஸர் அடிப்பது சற்று கடினம். ஆனால் உன்னிடம் திறமை இருக்கிறது; அதனால் அடிக்கலாம்’ என்றார்கள். என்னால் என்ன முடியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
நான் சிஎஸ்கேவில் விளையாடியதுபோல் இங்கு விளையாட தேவையில்லை. இந்த ஆடுகளம் புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. அதனால் இன்று (ஜூன் 12) வித்தியாசமாக விளையாடினேன்.
இங்கு (நியூயார்க்) விளையாடுவது ரஞ்சி கோப்பையில் விளையாடுவதுபோல் இருந்தது. சிக்ஸர் அடிக்க வெள்ளை பந்த்தில் காத்திருப்பதை நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. சிக்ஸர் அடிக்க உங்களது சிறந்த ஷாட்டினை உபயோகப்படுத்த வேண்டும். இன்று அதனை நிறைவேற்ற காத்திருந்தேன்.
இந்த மாதிரி ஆடுகளங்களில் வந்த உடன் முதல் பந்தில் இருந்து அடிக்க நினைப்பது கடினம். உங்களுக்கான நேரத்தினை எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவில் சிக்ஸர்கள் அடிப்பதை மிகவும் மிஸ் செய்கிறேன்.
இந்த நினைவுகளை அழிக்க விரும்பவில்லை. ஏனெனில் இதுதான் எனது முதல் உலகக் கோப்பை. ஆனால் பேட்டிங் கடினமாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பையில் இதுமாதிரி எப்போதுமே பார்த்ததில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.