
டி20 உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை மே.இ.தீ. அணிகள் வென்றது.
முதலில் பேட்டிங் ஆடிய மே.இ.தீவுகள் 20 ஓவர் முடிவில் 149/9 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 136/9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
2 போடிகளில் தோல்வியுற்றுள்ள நியூசிலாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகமே.
இந்தப் போட்டியின் தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:
எங்களுடைய பந்து வீச்சு இந்த ஆடுகளம் எப்படி பட்டதென எதிரணிக்கு குறிப்பு தெரிவிக்கும்படி இருந்தது. சரியான இடங்களில் பந்தினை அடித்தால் நல்ல பலனளிக்கும். இந்தப் போட்டியில் ஒரே வித்தியாசம் ரூதர்போர்ட்டின் பேட்டிங் மட்டுமே. அபாரமான மனதில் பதியும்படியுமான அவரது பேட்டிங் எங்களுக்கு வெறுப்பூட்டும்படியாக இருந்தது. மே.இ.தீ. அணியின் பேட்டிங் பலம் அவர்களுக்கு உபயோகமாக இருந்தது.
நாங்கள் அதிரடியாக விக்கெட்டுகள் எடுத்தோம். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சிறிய வித்தியாசங்கள்தான் போட்டியை மாற்றும். இன்று அது எங்களுக்கானதாக அமையவில்லை.
கடைசி ஓவர் சான்ட்னருக்கு கொடுத்ததுக்கு காரணம், எங்களுக்கு அவர்மீது முழு நம்பிக்கை இருந்ததாலயே. முதல் 12 ஓவர்கள் எங்கள் அணி பௌலர்கள் சிறப்பாகவே வீசினார்கள். முன்பே சொன்னதுபோல 3 பந்துகள்கூட ஆட்டத்தின் போக்கினையே மாற்றிவிடும். உங்களால் என்ன முடியும் என்பதைப் பயிற்சி எடுக்க வேண்டும்.
10-15 ரன்கள்கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2 நாள்களில் அடுத்த போட்டி இருக்கிறது. சாமர்தியமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் பாடமாக எடுத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி செல்ல விரும்புகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.