
சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் முக்கிய வீரராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று (ஜூன் 12) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.
இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் முக்கிய வீரராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூயார்க் ஆடுகளம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளமாக உள்ளது. அந்த ஆடுகளத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது சிறப்பானது. அதனால், அடுத்தடுத்தப் போட்டிகளில் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நியூயார்க் ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சின் தேவை அதிகமாக இல்லை. ஆனால், அடுத்து சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகளில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
குல்தீப் யாதவ் என்னுடைய முதல் தெரிவாக இருப்பார். ஏனென்றால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அணியில் அக்ஷர் படேல் மற்றும் ஜடேஜா ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். சஹால் மற்றும் குல்தீப் இவர்கள் இருவரில் குல்தீப் யாதவுக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.