

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிங்ஸ்டவுனில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷகிப் அல் ஹசன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக தன்சித் ஹாசன் 35 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வான் மிஹீரன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டிம் பிரிங்கிள் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.