
குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
முதலில் விளையாடிய பப்புவா நியூ கினியா 95 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 15.1 ஓவரில் 101/3 ரன்கள் எடுத்து வென்றது.
3 விக்கெட்டுகள் எடுத்த ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றி குறித்து ஆப்கன் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:
சூப்பர் 8 சுற்றுகுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உணர்கிறோம். முதல் போட்டியிலிருந்து வீரர்களின் முயற்சி அற்புதமாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரிகிறது. அதை சரியாக செய்துஎ நது வேலையை எளிதாக்கிவிட்டார்கள். குர்பாஜ் மாதிரி களத்தில் நான் இருக்கிறேன் என சென்று பேட்டிங் விளையாடவும் பவர்பிளேவில் பரூக்கி மாதிரி விக்கெட் எடுக்கவும் ஆள்கள் இருப்பது முக்கியம். பேட்டர்கள் அதிரடியாக ஆடும்போது பௌலர்களாக நாமும் சாதகமான ஆடுகளங்களில் அதிரடியாக பந்துவீச வேண்டும்.
தொடக்க வீரர்கள் 2 போட்டிகளில் நன்றாக விளையாடினார்கள். இன்று மற்றவர்கள் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு உள்ளூர் போட்டிகளில் நல்ல அனுபவம் இருந் தது. அனைவருமே நல்ல பார்மில் இருந்தார்கள். ஐபிஎல் போன்று உள்ளூர் கிரிக்கெட் விளையாடுவது எங்களுக்கு உதவியது. செயின்ட் லூக்கா அணிக்கு சிலர் விளையாடியுள்ளார்கள். அதனால் இதன் ஆடுகளம் எப்படி என எங்களுக்கு உதவியது.
எந்த வகையான ஆடுகளமாக இருந்தாலும் நாங்கள் தகவமைத்து சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த போட்டி மே.இ.தீ. உடனும் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.