
சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது சிறப்பானது. ஆனால், நாங்கள் இன்னும் எதையும் ஜெயிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம், சூப்பர் 8 சுற்றுக்கும் அந்த அணி தகுதி பெற்றது.
இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது சிறப்பானது. ஆனால், நாங்கள் இன்னும் எதையும் ஜெயிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்களுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. அந்த போட்டி மிகவும் முக்கியமானது. சக்திவாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடவுள்ளோம். நியூசிலாந்துக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றது நல்ல உணர்வை கொடுக்கிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், நாங்கள் இன்னும் எதையும் வெற்றி பெறவில்லை.
குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளோம். இனிதான் முக்கியமான போட்டிகள் வரவுள்ளன. அந்த போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். நாங்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை நான் நம்புகிறேன். எங்களால் எந்த ஒரு அணியையும் எதிர்கொள்ள முடியும். பெரிய அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கு எங்களை மேலும் தயார் செய்துகொள்ள வேண்டியுள்ளது என்றார்.
சூப்பர் 8 சுற்றில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி பார்படாஸில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.