6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

19 பந்துகளில் போட்டியை முடித்து இங்கிலாந்து உலக சாதனை!

டி20 உலகக் கோப்பை போட்டியில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து உலக சாதனை படைத்துள்ளது.

ஜானி பெயர்ஸ்டோ, கேப்டன் ஜாஸ் பட்லர். - Ricardo Mazalan

Published On :

டி20 உலகக் கோப்பை போட்டியில் ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து உலக சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் 28ஆவது போட்டியில் ஓமன் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய ஓமன் அணி 13.2 ஓவரில் 47 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஆடில் ரஷித் 4, மார்க் வுட் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19 பந்துகளில் 50/2 ரன்கள் எடுத்து போட்டியை முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. சால்ட் 12 ரன்கள், கேப்டன் ஜாஸ் பட்லர் 24 ரன்கள்*, வில் ஜாக்ஸ் 5, ஜானி பெயர்ஸ்டோ 8* ரன்கள் எடுத்தார்கள்.

இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணி. - Ricardo Mazalan

இதன் மூலம் குரூப் பி புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு ரன் ரேட் +3.081 ஆக மாறியுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற ஸ்காட்லாந்து அணி தோற்க வேண்டும், அடுத்த போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற வேண்டும்.

இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு ஸ்காட்லாந்துவிடம் இருக்கிறது. ஒருவேளை ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும். ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பையில் அதிகமான பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணிகள்:

  • 101 பந்துகள் - இங்கிலாந்து 2024

  • 90 பந்துகள் - இலங்கை 2014

  • 86 பந்துகள் - ஆஸ்திரேலிய 2024

  • 82 பந்துகள் - ஆஸ்திரேலியா 2021

  • 81 பந்துகள் - இந்தியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.