இந்திய அணியிலிருந்து இந்த இரண்டு ரிசர்வ் வீரர்கள் மட்டும் விடுவிக்கப்பட காரணம் என்ன?

லீக் போட்டிகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களில் இருவர் விடுவிக்கப்பட உள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்)
இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்)

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து ரிசர்வ் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் விடுவிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. லீக் சுற்றில் இந்திய அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. நாளை கனடாவுக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் விளையாடும் இந்திய அணி, வருகிற ஜூன் 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 8 சுற்றில் விளையாடவுள்ளது.

இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்)
ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டாய்னிஸ் இந்தியாவுக்கு ஹார்திக் பாண்டியா; பாராட்டிய முன்னாள் வீரர்!

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து ரிசர்வ் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் விடுவிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு 4 பேர் ரிசர்வ் வீரர்களாக தேவையில்லை என இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. அதன்காரணமாக ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது இருவரும் அணியுடன் இருப்பது போதுமானது என அணி நிர்வாகம் கருதுகிறது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அந்த இடத்துக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருக்கிறார். அதனால், அந்த இடத்தில் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில்லின் தேவை குறைகிறது. அதேபோல, ஹார்திக் பாண்டியாவை தவிர்த்து இந்திய அணியில் 3 முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். தேவைக்கேற்ப ஷிவம் துபேவும் பந்துவீச தயாராக இருக்கிறார். அதனால், வலதுகை பந்துவீச்சாளரான ஆவேஷ் கானின் தேவையும் குறைகிறது.

அணியில் பின்வரிசை ஆட்டக்காரர்களில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவருக்கு மாற்று வீரராக ரிங்கு சிங்கும், அர்ஷ்தீப் சிங்குக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவருக்கு மாற்றாக இடதுகை பந்துவீச்சாளரான கலீல் அகமதும் அணியில் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் அவர்கள் அணியில் தொடர்ந்து ரிசர்வ் வீரர்களாக இருப்பார்கள் எனத் தெரிகிறது.

இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்)
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதில் மகிழ்ச்சி, ஆனால்... என்ன சொல்கிறார் ஆப்கன் பயிற்சியாளர்!

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ரிசர்வ் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் லீக் போட்டிகள் முடிவடையும் வரை மட்டுமே இந்திய அணியுடன் இருப்பார்கள். கனடாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர்கள் இந்திய அணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com