
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடர் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்த தொடரில் செயிண்ட் லூசியாவில் இன்று நடைபெற்ற 35 ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
டாஸ்ஸை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பிரண்டன் மெக்முல்லன் 6 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 60 ரன்னும், பெரிங்க்டன் 42 ரன்னும், மூன்சே 35 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.
டேவிட் வார்னர் 1 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 8 ரன், மேக்ஸ்வெல் 11 ரன்னிலும் வெளியேறினர்.
இதையடுத்து டிராவிஸ் ஹெட்-மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
டிராவிஸ் ஹெட் 49 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்னும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 29 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.
இதையடுத்து டிம் டேவிட் 3 சிக்சர், 1 பவுண்டரிகளுடன் 24 ரன்னும் மற்றும் மேத்யூ வேட்(4) களத்தில் இருந்தனர்.
முடிவில் ஆஸ்திரேலியா 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தத் தொடரில் அவர் பெற்ற 3 ஆவது ஆட்டநாயகன் விருது இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக பெற்ற 7 ஆவது வெற்றி இதுவாகும்.
7* - ஆஸ்திரேலியா (2022-2024)
7 - இங்கிலாந்து (2010-2012)
7 - இந்தியா (2012-2014)
6 - ஆஸ்திரேலியா (2010)
6 - இலங்கை (2009)
6 - இந்தியா (2007-2009)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.