டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? முன்னாள் வீரர் பதில்!
படம் | AP

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? முன்னாள் வீரர் பதில்!

முக்கியமான போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், லீக் சுற்றில் எடுத்த ஸ்கோர்கள் பெரிதாக பேசப்படாது.
Published on

முக்கியமான போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், லீக் சுற்றில் எடுத்த ஸ்கோர்கள் பெரிதாக பேசப்படாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. சூப்பர் 8 சுற்றில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? முன்னாள் வீரர் பதில்!
சூப்பர் 8 சுற்றில் நுழையப்போவது யார்? வங்கதேசமா அல்லது நெதர்லாந்தா?

லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடிய விராட் கோலி வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தபோதிலும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

இந்த நிலையில், முக்கியமான போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி நன்றாக விளையாடினால், லீக் சுற்றில் எடுத்த ஸ்கோர்கள் பெரிதாக பேசப்படாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (கோப்புப் படம்)
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களைத் தேர்வு செய்யும்போது, அவர்களது பரந்த அனுபவத்தின் காரணமாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முக்கியமான போட்டிகளில் அவர்களது அனுபவம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும். அதனால், அவர்கள் ஃபார்மில் இல்லாமலிருப்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த போவதில்லை. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் மூத்த வீரர்களிடத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். அந்தப் போட்டிகளில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், முந்தையப் போட்டிகளில் எடுத்த ரன்கள் எல்லாம் பெரிதாக பேசப்படாது.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? முன்னாள் வீரர் பதில்!
பாகிஸ்தான் அணிக்குள் 3 பிரிவுகளா? டி20 உலகக் கோப்பையில் சொதப்பியது எப்படி?

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் என்ன என்பது இந்திய அணித் தேர்வுக் குழுவிடமும், சம்பந்தப்பட்ட வீரர்களிடமும் கேட்கப்பட வேண்டிய கேள்வி. இந்தியத் தேர்வுக்குழு உறுப்பினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கிடையில், நமக்கு நிறைய நாள்கள் இருக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com