நியூசிலாந்து கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சேவகன்; டிரண்ட் போல்ட்டுக்கு கேன் வில்லியம்சன் புகழாரம்!

நியூசிலாந்து மற்றும் உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சேவகன் டிரண்ட் போல்ட் என கேன் வில்லியம்சன் பாராட்டு.
டிரண்ட் போல்ட்
டிரண்ட் போல்ட்படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

நியூசிலாந்து மற்றும் உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சேவகன் டிரண்ட் போல்ட் என அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பப்புவா நியூ கினியாவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டிரண்ட் போல்ட்
சர்வதேச டி20 போட்டிகளில் 27 பந்துகளில் சதம் விளாசி சாதனை!

நியூசிலாந்தின் கடைசி லீக் போட்டியே நியூசிலாந்து அணிக்காக தான் விளையாடும் கடைசி போட்டி என டிரண்ட் போல்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தார். நேற்றையப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய டிரண்ட் போல்ட் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சேவகன் டிரண்ட் போல்ட் என அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அவரைப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கேன் வில்லியம்சன் (கோப்புப்படம்)
கேன் வில்லியம்சன் (கோப்புப்படம்)

இது குறித்து போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் ஏதேனும் ஒரு விஷயம் நடைபெறும். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் விளையாடும் கடைசி ஐசிசி தொடர். நியூசிலாந்து அணிக்காகவும், உலக கிரிக்கெட்டுக்காகவும் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். அவர் நியூசிலாந்து அணியிலிருந்து விடைபெறுவதை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். புதிய வீரர்கள் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பினை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

டிரண்ட் போல்ட்
பாகிஸ்தானுடன் நேரத்தை வீணாக்காதீர்கள், இந்தியாவுக்கு வாருங்கள்; கேரி கிறிஸ்டனுக்கு முன்னாள் இந்திய வீரர் ஆலோசனை!

இதுவரை நியூசிலாந்து அணிக்காக 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிரண்ட் போல்ட் 83 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com