
இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பும்ராவை பாராட்டி பேசியுள்ளார் முன்னாள் வீரர் இயன் பிஷப்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா சிறப்பாக விளையாடி வருகிறார். 2 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்தினார்.
பும்ராவை பாராட்டி முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப் கூறியதாவது:
ஜஸ்பிரித் பும்ரா திறமையான நல்ல தகவல் தொடர்பாளர். வேகமாக வீசக் கூடியவர். ஆனால் மற்ற பந்து வீச்சாளர்களை தாண்டியும் அந்த வேகத்தினை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று நன்கறிந்தவர். எல்லா நாள்களும் ஸ்டம்பினை பார்த்து பந்தினை வீசுவதில்லை, சில நாள்கள் யார்க்கர் வீசுவேன், சில நாள்கள் வைட் யார்க்கர் வீசுவேன், சில நேரங்களில் மெதுவான பந்துகள், பவுன்சர்களும் உபயோகிப்பேன் என பும்ரா சொல்லுவதைக் கேட்கலாம்.
இதுமட்டுமின்றி பும்ராவிடம் வேறொன்றும் உள்ளது. தனது வித்தியாசமான பந்து வீசும் முறையினால் எங்கு வேகமான பந்தினை வீச வேண்டும் என தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் சில நேரங்களில் அவரது ஃபுல்டாஸ் பந்துகளை அடிக்கமுடிவதில்லை. ஏனெனில் அவை நம்மை நோக்கி பாயும்.
சில நேரங்களில் நாம் அந்த மரியாதையை எடுத்துவிட்டால் அதனாலயே பேட்டர்களுக்கு கடினமாக இருக்கிறது. மேத்யூ ஹைடன் கர்டிலி அம்ப்ரோஸ் பந்துவீச்சினை அடிக்க நினைப்பதில்லை. ஆனால் எனது பந்து வீச்சினை அடிக்க நினைப்பார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் பந்துவீச்சாளர் என்றார்.
ஐபிஎல் போட்டியில் ஒருமுறை பும்ராவை பந்து வீசுவது குறித்து பிஎச்டி வகுப்பெட்டுக்க கூறியதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.