தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிரணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 325/3 ரன்கள் எடுத்துள்ளது.
120 பந்துகளில் 136 ரன்கள் அடித்த ஸ்மிருதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்சியாக சதமடித்த இந்திய மகளிர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் போட்டியில் 117 ரன்கள் அடித்திருந்தார் ஸ்மிருதி.
இதற்கு முன்பாக 1986இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா சார்பில் விளையாடிய சந்தியா அகர்வால் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா அடித்ததே முதல்முறை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சதத்தின் மூலம் இந்தியாவின் சார்பாக அதிக சதமடித்த ( 7 சதம்) மிதாலி ராஜுடன் சமன்செய்துள்ளார். சர்வதேச அளவில் இவர்கள் 10ஆவது இடத்தில் இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 15 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.