ஆஸி. வீரர்கள் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படுவார்கள்: மிட்செல் மார்ஷ்

முக்கியமான தருணங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்தார்.
ஆஸி. வீரர்கள் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படுவார்கள்: மிட்செல் மார்ஷ்
படம் | AP
Published on
Updated on
1 min read

முக்கியமான தருணங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்துக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங் செய்த விதம் பல விமர்சனங்களை சந்தித்தது.

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஃபீல்டிங்கில் நிறைய தவறுகள் செய்தார்கள். கேட்ச்சுகளை சரியாகப் பிடிக்கவில்லை.

ஆஸி. வீரர்கள் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படுவார்கள்: மிட்செல் மார்ஷ்
குல்தீப் யாதவுக்கு முகமது சிராஜ் வழிவிட வேண்டும்: பியூஸ் சாவ்லா

இந்த நிலையில், முக்கியமான தருணங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங் செய்த விதம் கண்டிப்பாக எங்களது சிறப்பான செயல்பாடு கிடையாது. நானே மூன்று கேட்ச்சுகளை தவறவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படக் கூடியவர்கள். நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தேவை ஏற்பட்டால் பந்துவீசுவேன் என்றார்.

ஆஸி. வீரர்கள் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்படுவார்கள்: மிட்செல் மார்ஷ்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையளிக்கிறது: பில் சால்ட்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் பாதியில் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com