
இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெற குல்தீப் யாதவுக்கு முகமது சிராஜ் வழிவிட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக கருதப்படும் பார்படாஸில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம்பெற குல்தீப் யாதவுக்கு முகமது சிராஜ் வழிவிட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் கண்டிப்பாக கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளர் தேவை. அதிலும் குறிப்பாக, இதுபோன்ற ஆடுகளங்களில் கண்டிப்பாக கூடுதல் ஸ்பின்னர் தேவை. அணியில் அக்ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இருக்கிறார்கள். ஹார்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசுகிறார். அதனால், அர்ஷ்தீப் சிங் அல்லது முகமது சிராஜ் இருவரில் ஒருவர் குல்தீப் யாதவுக்கு இந்திய அணியில் இடம்கிடைக்க வழிவிட வேண்டும். அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசியுள்ளார். அதனால், முகமது சிராஜ் குல்தீப் யாதவுக்காக வழிவிட வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.