

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் குல்தீப் யாதவுக்கு நகைச்சுவையான அறிவுரை ஒன்றை ரோஹித் சர்மா வழங்கியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பிப்பதற்கு குறைவான நாள்களே இருப்பதால், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள திலக் வர்மா மற்றும் குல்தீப் யாதவ் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரின் கேப்டன் ரோஹித் சர்மா ரோட்மேப் என்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: திலக் வர்மா மிகவும் வித்தியாசமான வீரர் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் மிகவும் அற்புதமாக விளையாடினார். அவரது ஆட்டம் நம்பமுடியாத விதமாக இருந்தது. அவர் மிகப் பெரிய போட்டிகளுக்கான வீரர் என்பதை வெளிப்படுத்தி வருகிறார் என்றார்.
அந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் குறித்து ரோஹித் சர்மா நகைச்சுவையாக பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக குல்தீப் யாதவுக்கு என்னிடம் எந்த ஒரு அறிவுரையும் இல்லை. அவர் சிறப்பாக பந்துவீசுவதை மட்டும் செய்தால் போதும். ஒவ்வொரு பந்துக்கும் நடுவரிடம் முறையீடு செய்து கொண்டிருக்க முடியாது என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.