
உகாண்டா அணியின் கேப்டன் பதவியிலிருந்து பிரையன் மசாபா விலகியுள்ளார்.
உகாண்டா கிரிக்கெட் அணியை கடந்த 5 ஆண்டுகளாக பிரையன் மசாபா கேப்டனாக வழிநடத்தி வருகிறார். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் உகாண்டா அணியை அவரே கேப்டனாக வழிநடத்தினார். குருப் சி பிரிவில் இடம்பெற்ற உகாண்டா அணி, விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்த நிலையில், உகாண்டா அணியின் கேப்டன் பதவியிலிருந்து பிரையன் மசாபா விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரையன் மசாபா பேசியதாவது: கடந்த சில நாள்களாகவே கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்து சிந்தித்தேன். எனது நாட்டை வழிநடத்தியது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். ஒரு வீரராகவும், அணியின் கேப்டனாகவும் தலைமைப்பண்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் அனைத்தும் என் மீதமுள்ள வாழ்நாள் முழுதும் என்னுடன் இருக்கும் என்றார்.
இதுவரை உகாண்டா அணிக்காக 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பிரையன் மசாபா 439 ரன்களும், 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.