
அமெரிக்க வீரர்களிடம் மே.இ.தீவுகள் அணியின் ஜாம்பவான் கிரிக்கெட்டர் சந்தித்து பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வென்றது.
முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுக்க, அமெரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்களே சோ்த்தது.
முன்னாள் வேகப் பந்து வீச்சாளரும் தற்போது ஜமைக்கா அணியின் பயிற்சியாளருமான கர்ட்லி ஆம்ப்ரோஸ் பேசியதாவது:
மதிய வணக்கம் நண்பர்களே, விரைவில் பேசி முடித்து விடுகிறார். இன்றைய போட்டியில் நீங்கள் தோல்வியுற்றாலும் நீங்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். இதையே நீங்கள் அடுத்த போட்டியிலும் பலமாக்க வேண்டும். நீங்கள் எதற்கும் வெட்கப்படவோ, கூசப்படவோ தேவையில்லை. வலுவான அணியுடன் நீங்கள் நன்றாக விளையாடியுள்ளீர்கள்.
இதை அடுத்த போட்டியிலும் தொடர்வீர்களாக. நான் உங்களுக்கு வாழ்த்து சொல்லவே வந்தேன். உங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும்.
உங்களை நம்புங்கள். குழுவாக விளையாடுங்கள். தனியாகவும் குழுவாகவும் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நிச்சயமாக கடைசியில் நல்ல முடிவு கிடைக்கும். அதை விடவும் முக்கியம் நீங்கள் எதை செய்தாலும் ரசித்து செய்ய வேண்டும். வருங்காலத்துக்கு வாழ்த்துகள். அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.