அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரையிறுதியில் இங்கிலாந்து

சூப்பர் 8 ஆட்டத்தில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்தது.

News image
இங்கிலாந்து வீரர்கள்.
Updated On :23 ஜூன் 2024, 10:56 pm

DIN

டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிரிட்ஜ்டெüனில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெüலிங்கை தேர்வு செய்தது.

இந்நிலையில் அதன் தொடக்க பேட்டர்கள் ஸ்டீவன் டெய்லர், ஆன்ட்ரிஸ் கோஸ் ஆகியோர் சிறந்த தொடக்கத்தை அளிப்பர் எனக்கருதப்பட்ட நிலையில், ஸ்டீவன் 12, கோஸ் 8 ரன்களுடன் நடையைக் கட்டினர்.

நிதிஷ் குமார் 30, கோரே ஆண்டர்ஸன் 29, ஹர்மீத் சிங் 21 ஆகியோர் மட்டுமே ஒரளவுக்கு ரன்களை எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

கடைசி மூன்று பேட்டர்களான அலி கான், நாஸ்துஷ், செüரப் ஆகியோர் கிறிஸ் ஜோர்டன் பந்தில் டக் அவுட்டானார்கள்.

அமெரிக்கா 115/10: வெறும் 18.5 ஓவர்களிலேயே 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அமெரிக்கா.

கிறிஸ் ஜோர்டான் அசத்தல் 4 விக்கெட்: பெüலிங்கில் இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறிஸ் ஜோர்டான் 10 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அசத்தல் வெற்றி 117/0: 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தரப்பில் களமிறங்கிய பிலிப் சால்ட்}ஜோஸ் பட்டல் இருவரும் அசத்தலாக ஆடி 9.4 ஓவர்களிலேயே 117/0 ரன்களைக் குவித்து தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

ஜோஸ் பட்லர் அதிரடி 83: கேப்டன் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி 7 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். அவருக்கு துணையாக ஆடிய பிலிப் சால்ட் 25 ரன்களை சேர்த்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.