எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறுவோம்; தென்னாப்பிரிக்க கேப்டன் நம்பிக்கை!

எந்த சூழ்நிலையிலிருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
அய்டன் மார்க்ரம்
அய்டன் மார்க்ரம்படம் | AP
Published on
Updated on
1 min read

வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், எந்த சூழ்நிலையிலிருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (ஜூன் 29) மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது.

அய்டன் மார்க்ரம்
2011இல் தோனியும் பெரிதாக ரன் அடிக்கவில்லை: கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர்!

இந்த நிலையில், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், எந்த சூழ்நிலையிலிருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூற வேண்டுமென்றால், இறுதிப்போட்டியை புதிய போட்டியாக பார்க்கிறேன். இந்தியா மிகவும் வலிமையான அணி என்பது நம் அனைவருக்கும் தெரியும். தென்னாப்பிரிக்க அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான பாதையில் பயணித்து வருகிறது. நாங்கள் எதிர்பார்த்த இலக்கை அடையாவிட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். வலுவான இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ளது உற்சாகமாக இருக்கிறது.

அய்டன் மார்க்ரம்
இறுதிப்போட்டியில் தோற்றால் ரோஹித் சர்மா கடலில் குதித்து விடுவாரா? என்ன சொல்கிறார் சௌரவ் கங்குலி!

தென்னாப்பிரிக்க அணிக்கு முதல் முறையாக கோப்பையை வெல்ல கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு இந்த இறுதிப்போட்டி. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சில போட்டிகளில் கடினமான சூழலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றோம். அந்த வெற்றிகள் அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. எந்த சூழ்நிலையிலிருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com