
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் அணி மோதியது. இந்திய நேரப்படி அதிகாலை விளையாடியது.
இதில் முதலில் பேட்டி செய்த மே.இ.தீ. அணி 20 ஓவர் முடிவில் 257/4 ரன்கள் எடுத்தது. இதில் நிகோலஸ் பூரன் 75 ரன்கள், ரோமன் பவல் 52, ரூதர்போர்டு 47 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
9 பேர் மட்டுமே கொண்டு ஆடிய ஆஸி. அணி 20 ஓவர் முடிவில் 222/7 ரன்கள் எடுத்தது. இதில் ஜோஷ் இங்கிலீஷ் 55 ரன்கள், நாதன் எல்லிஸ் 39 ரன்கள், டிம் டேவிட் 25, ஆடம் ஜாம்பா 21 ரன்களும் எடுத்தார்கள்.
35 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீ. அணி வெற்றி பெற்றது. ஆஸி.க்கு முதல் டி20 உலகக் கோப்பை போட்டி ஜூன் 6இல் ஓமனுடன் விளையாடவிருக்கிறது. ஐபிஎல் போட்டி காரணமாக சில வீரர்களுக்கு பயிற்சி ஆட்டதில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தனது முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது. பயிற்சி ஆட்டம் ஜூன் 1ஆம் தேதி வங்கதேசத்துடனும் விளையாடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.