இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

எழுத்தாளர் ஆ. மாதவன் காலமானார்

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ. மாதவன் காலமானார்.

News image

எழுத்தாளர் ஆ. மாதவன்

Updated On :5 ஜனவரி 2021, 5:03 pm IST

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ. மாதவன் காலமானார்.

மறைந்த மாதவனுக்கு வயது 86. தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், குடும்பத்தினர் இடம் பெயர்ந்ததால் திருவனந்தபுரத்தில் வசித்துவந்தார்.

எழுத்தாளர் ஆ. மாதவனின் முதல் நாவலான புனலும் மணலும், 1970-களில் வாசகர் வட்டத்தால் வெளியிடப்பட்டது. கிருஷ்ணப் பருந்து இவருடைய புகழ்பெற்ற நாவல். தூவானம் என்றொரு குறுநாவலும் எழுதியுள்ளார்.

எண்ணற்ற சிறுகதைகளும் எழுதியுள்ளார். திருவனந்தபுரத்தில் சாலைத் தெருவில் கடை வைத்திருந்த இவர், கடை வீதிப் பின்னணியில் நிறைய கதைகளை எழுதியுள்ளார். 

2015 ஆம் ஆண்டு இலக்கியச் சுவடுகள் நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் மாதவன்.

மலையாளத்திலிருந்து இரு நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.