சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மகாராஷ்டிரம்: பண்டாரா மருத்துவமனையில் தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி

மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழு

News image

மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனை

Updated On :9 ஜனவரி 2021, 9:22 am IST


மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. 

பண்டாரா அரசு பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்து புகை வெளியே வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணியில் இருந்த செவிலியர் ஒருவர், உடனடியாக அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளார். 

Story image

இதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்தது விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு வீரர்களின் மீட்பு நடவடிக்கையால் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் இருந்த வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த 17 குழந்தைகளில் 7 குழந்தைகளை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற 10 குழந்தைகளை மீட்க முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

Story image

அனைத்து குழந்தைகளும் ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்று ஒரு மருத்துவர் கூறினார்.

நான்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் மின்கசிவு  காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

புதிததாக பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.