புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கன்னியாகுமரி கிராமப்புற பகுதிகளில் முதல்வரின் மகள் செல்வி "ரகசிய சர்வே'

 கன்னியாகுமரி, ஏப். 22: முதல்வர் கருணாநிதியின் மகள் மு.க. செல்வி, கன்னியாகுமரி சுற்று வட்டாரக் கிராமப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ரகசிய சர்வே நடத்தினார்.  கன்னியாகுமரி மக்களவைத் தொ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:36 am

தி. ராமகிருஷ்ணன்

 கன்னியாகுமரி, ஏப். 22: முதல்வர் கருணாநிதியின் மகள் மு.க. செல்வி, கன்னியாகுமரி சுற்று வட்டாரக் கிராமப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ரகசிய சர்வே நடத்தினார்.

 கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஹெலன் டேவிட்சன் போட்டியிடுகிறார்.

 இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குக் கேட்டு மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸôடாலின் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்தார்.

 அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளின்போது, கடந்த சில ஆண்டுகளாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வருவது வழக்கம்.

 ஆனால், தேர்தல் பிரசாரம் என்பதால் திமுக கூட்டணியின் பலம் எவ்வாறு உள்ளது என்பதை அறியும் நோக்கில் முதல்வரின் மகளான மு.க. செல்வியும் இம்முறை சுற்றுப்பயண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

 அப்போது மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜனின் மனைவி பாரதியுடன், முதல்வர் கருணாநிதியின் மகள் மு.க. செல்வி அருகில் உள்ள கிராமங்களுக்கு காரில் சென்றார்.

 கல்லுவிளை பகுதியில் காரை நிறுத்திய செல்வி, வயல் வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் உங்கள் ஓட்டு யாருக்கு?, உங்கள் ஊரில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் அதிகம் உள்ளனர் எனக் கேட்டார்.

 பின்னர், லீபுரம் பகுதிக்குச் சென்ற அவர் வாழைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவருக்கு மதிய உணவை கொடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பெண்ணிடமும் அதே கேள்வியைக் கேட்டுள்ளார்.

 சைக்கிளில் வந்த ஒருவரிடம் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று மு.க. செல்வி கேட்க அவர் உற்சாகமாய் இரட்டை விரலைக் காட்டியுள்ளார்.

 கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் "சர்வே' நடத்திய பின்னர் அங்கிருந்து ஓட்டல் தமிழ்நாடு திரும்பியுள்ளார் முதல்வர் மகள்.

 பாதுகாப்பு எதுவும் இன்றி தனியாக வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டுச் சென்றது முதல்வரின் மகள் என்பது மறுநாள் தான் அனைவருக்கும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.