சென்னை, மே 22: ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் ஏ.என். சந்திரசேகரனுக்கு, ஊரக மருத்துவ சேவை இயக்குநருக்கு நிகரான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் ஏ.என். சந்திரசேகரன் தொடர்ந்த மனு விவரம்:
சென்னை மருத்துவக் கல்லூரியில் மூட்டுவலி சிகிச்சைத் துறைத் தலைவராக 1979 முதல் பணியாற்றி வந்தேன். ஞானசூரியன் என்பவர் ஊரக மருத்துவ சேவை இயக்குநர் (டி.எம்.எஸ்.) பதவியிலிருந்து 1995-ல் ஓய்வுபெற்றார். பணி மூப்புப் பட்டியலில், இரண்டாவதாக எனது பெயர் இடம்பெற்றிருந்தது. முதலாவதாக இடம்பெற்றிருந்தவர் ஊரக மருத்துவ சேவை இயக்குநர் பதவிக்குச் செல்ல விரும்பவில்லை.
இதையடுத்து, ஊரக மருத்துவ சேவைகள் இயக்குநராக நான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஊரக மருத்துவ சேவைகள் இயக்குநர் பணி நியமனத்துக்கான விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் காரணமாக நான் நியமிக்கப்படவில்லை.
கடந்த 1993-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திருத்தத்தின்படி, ஊரக மருத்துவத் துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியவர் மட்டுமே அந்தத் துறையின் இயக்குநராக முடியும்.
மருத்துவத் துறையில் நீண்ட காலம் பேராசிரியராகப் பணியாற்றி இருப்பதால், ஊரக மருத்துவத் துறை இயக்குநராவதற்கு அனைத்து தகுதிகளும் எனக்கு இருந்தன. சென்னை மருத்துவக் கல்லூரியில் நான் ஆசிரியராக நியமிக்கப்படும்போது, கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்றுவோருக்கும், மருத்துக் கல்வித் துறையில் பணியாற்றுவோருக்கும் பொதுவான பணிமூப்பு பட்டியல் இருந்தது.
இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு முன்பாக, எனக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. எனவே, இந்தத் திருத்தம் எனக்குப் பொருந்தாதது என்று உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு, நீதிபதி எஸ். நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு: மனுதாரர், மருத்துவத் துறையில் ஆசிரியராக நியமிக்கப்படும்போது, டி.எம்.எஸ். ஆக பதவி உயர்வு பெற எந்த நிபந்தனையும் இல்லை. எனவே, டி.எம்.எஸ். நியமன விதிகளில் திருத்தம் செய்வதற்கு முன்னதாக, மனுதாரர் மருத்துவ சேவைக்கு மாறுவதற்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், திருத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தது சட்ட விரோதமானது.
மனுதாரர் ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஊரக மருத்துவ சேவை இயக்குநர் பணிக்கு நிகரான சிறப்பு அலுவலர் பதவியில் அவர் நியமிக்கப்பட்டதாகக் கருத வேண்டும். அதன் அடிப்படையில், அந்தப் பணிக்குரிய ஓய்வூதியப் பலன்களை அவருக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: தவெக தோ்தல் அறிக்கை!
அம்பேத்கர் கொள்கையை கடைசி மூச்சுவரை பாதுகாப்பேன்: ராகுல் காந்தி
திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை!

தரமான ரேஷன் அரிசி, டியூசன் அக்கா திட்டம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

