பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தின் துணை நிறுவனம் என்டிபிசி பசுமை எரிசக்தி லிமிடெட் (என்ஜிஇஎல்) நிறுவனம். இந்த நிறுவனம் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி வணிகத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது.
நாட்டின் வளர்ச்சித் தேவைகளுக்கேற்ப, 2032-ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 60 ஜிகாவாட் உற்பத்தித் திறனை எட்டும் லட்சியத் திட்டத்தை இந்நிறுவனம் முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது. சம வாய்ப்பு வழங்கும் நிறுவனமாகத் திகழும் என்ஜிஇஎல், இந்தியா முழுவதும் உள்ள தனது கார்ப்பரேட் அலுவலகம், மின் நிலையங்கள், தளங்கள், தொகுப்புகள், கூட்டு முயற்சிகள் மற்றும் துணை நிறுவனங்களில் உதவி பொறியாளராக பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஜூலை 31-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இது குறித்த விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 02/2026
பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல்,மெக்கானிக்கல், எலக்ட்ரானிஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து மின் உற்பத்தி நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப் படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.ngel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
NGELinvites online recruitment applications through NGEL website for 114 Assistant Engineer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

ராணுவக் குடியிருப்பு வாரியத்தில் உதவி, இளநிலை பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஆயுத தொழிற்சாலையில் புராஜெக்ட் பொறியாளர் வேலை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



