பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

கண்டுகொள்ளப்படாத கருவூலத் துறை

சென்னை, நவ. 5:  பதவி உயர்வு, எழுதுபொருள்கள் ஆகியன தங்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என கருவூலத் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   எழுத்துப் பணி பிரதானமாக உள்ள துறையில் எழுதுபொருள்கள் மறுக்கப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:59 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, நவ. 5:  பதவி உயர்வு, எழுதுபொருள்கள் ஆகியன தங்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை என கருவூலத் துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  எழுத்துப் பணி பிரதானமாக உள்ள துறையில் எழுதுபொருள்கள் மறுக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளத்தை ஒப்புதல் செய்யும் பணியை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. அரசுத் துறைகளில் இருந்து சமர்ப்பிக்கப்படும் பட்டியல் அடிப்படையில் மாதச் சம்பளம் அளிக்கப்படுகிறது.

  இதற்காக, தமிழகம் முழுவதும் 203 சார் கருவூலங்களும், 30 மாவட்ட கருவூலங்களும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சம்பளம், ஓய்வூதியம் தொடர்பாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை ஊழியர்கள் தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

  பதவி உயர்வில் தாமதம்... கருவூலத் துறையில் இளநிலை உதவியாளர், கணக்காளர் (அக்கவுண்டன்ட்), கண்காணிப்பாளர் என்ற அளவில் பதவி நிலைகள் உள்ளன.

  ""தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. மொத்தமாக, 1,200-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு இப்போதுதான் நடவடிக்கை எடுத்துள்ளது. காலியிடங்கள் உருவான போதே அவற்றை நிரப்பி இருந்தால் கருவூலத் துறையில் அதிகமானோருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும். ஆனால், உரிய நேரத்தில் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், பலர் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர்.

  இப்போது, 777 அக்கவுண்டன்ட் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பே, பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது'' என ஊழியர்கள் கூறுகின்றனர்.

  புதிய ஊழியர்களை நியமித்துவிட்டு பின்னர், பணியில் இருப்போருக்கு பதவி உயர்வு என்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  எழுதுபொருள்கள் இல்லை... அரசு ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்டவற்றை பட்டியலிடுவது, கணக்குகளை சரிபார்ப்பது என கருவூலத் துறையில் எழுத்துப் பணி அத்தியாவசியமானது. ஆனால், "எழுதுவதற்கு எந்த பொருள்களும் வழங்கப்படுவதில்லை' என்பது ஊழியர்களின் புகாராக உள்ளது.

  ""தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசின் பிற துறைகளில் பேப்பர், பேனா, ரப்பர், பென்சில் போன்ற எழுதுபொருள்கள் வழங்கப்படும். ஆனால், கருவூலத் துறையில் இந்தப் பொருள்கள் எதுவும் வழங்குவதில்லை. சம்பளம் தொடர்பான பணியின்போது எழுத்து வேலை அதிகமாக இருக்கும். அதற்கு, பேப்பர் உள்ளிட்ட பொருள்கள் அவசியம். ஆனால், அவை வழங்கப்படுவதில்லை. இதனால், சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்காக வரும் ஊழியர்களிடம் கருவூலத் துறையின் சில பணியாளர்கள் காசு கேட்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. துறைக்கு முறையாக எழுது பொருள்கள் வழங்கப்பட்டால் இந்த நிலை ஏற்படாது'' என்று கருத்துத் தெரிவிக்கின்றனர் கருவூலத் துறை ஊழியர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.