சென்னை, நவ. 26: தமிழகத்தில் உள்ள பல்வேறு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாததால் ஊழியர்களும், அவர்களின் வாரிசுகளும் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசுத் துறை, மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து கழகங்களில் நடுத்தர மற்றும் கீழ்நிலைப் பணிகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுடைய வாரிசுகளின் திருமணம் அல்லது மேற்படிப்புக்குத் தேவையான பெருந்தொகைக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு கிடைக்கும் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.), சமூக பாதுகாப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதிய பலன்களையே எதிர்நோக்கி இருப்பார்கள்.
இந்த பலன்கள் ஓய்வு பெற்றவுடன் கிடைத்துவிடும் என்ற கனவில், கடன் வாங்கி தங்களது கடமைகளை முன்கூட்டியே நிறைவேற்றி விடுகின்றனர்.
இந்தக் கனவு பெரும்பாலும் மற்ற அரசுத் துறை ஊழியர்களுக்கு நிறைவேறியபோதும், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் கனவாகவே நீடித்து வருகிறது. இதனால் ஊழியர்களும், அவர்களுடைய வாரிசுகளும் கடும் சிக்கல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. பணியாளர் பற்றாக்குறை, உதிரிப் பாகங்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்தத் துறை பாதிக்கப்பட்டிருப்பதுபோல், ஓய்வூதிய பலன்கள் சரிவர கிடைக்காமல் அதில் பணிபுரியும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஓய்வூதிய பலன்கள் ஒரு சில ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போதும், பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டால் நிதியில்லை என்ற பதில்தான் வருகிறது.
வருங்கால வைப்பு நிதி: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 2009 ஜனவரி முதல் அக்டோபர் வரை ஓய்வு பெற்ற 200-க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை வருங்கால வைப்பு நிதி வழங்கப்படவில்லை.
குடும்ப ஓய்வூதியம்: பணியில் இருக்கும் போது விபத்து அல்லது உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 42 பேருக்கு நிலுவையில் உள்ளது. 2001 முதல் 2008 வரை பணியில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்லது.
இதுபோல் ஓய்வு பெற்ற பின் இறக்கும் ஊழியரின் மனைவிக்கு வழங்கப்படும் விதவை ஓய்வூதியம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. 2002 முதல் 2009 வரை 40 வாரிசு விதவைகள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமூகப் பாதுகாப்பு நிதி: சமூகப் பாதுகாப்பு நிதி என்ற பெயரில் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் அதிகபட்சம் ரூ.200 வரை பிடித்தம் செய்து, அவ்வப்போது ஓய்வு பெறும், விருப்ப ஓய்வு பெறும் அல்லது இறக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு அதிகபட்சம் ரூ.34 ஆயிரம் வரை வழங்கப்படும். இந்தத் தொகை 2008 ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு நிலுவையில் உள்ளது.
இதுபோல் கம்யூட்டேஷன் தொகை 2003-ல் ஓய்வு பெற்ற 300 பேருக்கும், 2007-ல் ஓய்வு பெற்ற 75 தொழிலாளர்களுக்கும் இதுவரை வழங்கவில்லை. விடுமுறை கால ஊதியம் 2007 ஆகஸ்ட் முதல் 2009 அக்டோபர் வரை ஓய்வு பெற்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
தொழிலாளியின் சம்பளத்தில் மாதம் மாதம் ரூ.50 வரை பிடித்தம் செய்து, 1992-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.300, ரூ.450, ரூ.600, ரூ.750 என்ற வீதத்தில் வழங்கப்பட்டு வரும் ஓய்வுகால சேமநல நிதி, 2009 ஜூன் முதல் வழங்கப்படவில்லை. இதே நிலைதான் உள்ளது. இதே நிலை நீடித்தால் 2013-க்குப் பின் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு எந்தவித ஓய்வூதிய பலன்களும் கிடைக்காமல் போய்விடும்.
எனவே, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்களை, அரசு நேரடியாக பொறுப்பேற்று வழங்கினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


