புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தீபாவளி: நிரம்பி வழியும் பஸ், ரயில்கள்; ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டண வசூல்!

சென்னை, அக். 4:     தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் "ஆம்னி' பஸ்களில் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டனர்.   நெரிசலைச் சமாளிக்க அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:05 pm

ச. குமரன்

சென்னை, அக். 4:     தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் "ஆம்னி' பஸ்களில் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டனர்.

  நெரிசலைச் சமாளிக்க அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் முன்பதிவுகளால் நிரம்பி விட்டன. இதனால் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் கோயம்பேடு பஸ் நிலையத்திலும் மக்கள் கூட்டம் இப்போதே அலைமோதுகிறது.

  சென்னையில் இருந்து தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. இதே போல 200 சிறப்பு விரைவு பஸ்களிலும் முன்பதிவு முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, தஞ்சை உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை இப்போது 4 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  மேலும் 1,000 சிறப்பு பஸ்கள்:  தீபாவளிக்கு இன்னமும் 2 வாரங்களே உள்ள நிலையில், கடைசி நேர நெரிசலைச் சமாளிக்கும் வகையில் மேலும் ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 15, 16, 17, 18 ஆகிய நாள்களில் மட்டும் இதர அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த இந்த பஸ்கள் சென்னை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன.

  இந்த பஸ்களில் பயணம் செய்ய, முன்பதிவு செய்ய வரிசையில் காத்திருக்கும் பயணிகளுக்கு "டோக்கன்' முறையில் டிக்கெட் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே உள்ள காலியிடத்தில் தாற்காலிக பஸ் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு:    இதே போல தீபாவளி நாள்களில் இரு மார்க்கங்களிலும், முக்கிய ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யாத பொதுப்

     பெட்டிகளை கூடுதலாக இணைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடைசி நேர நெரிசலைப் பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் "அதிருப்தி' தெரிவித்துள்ளனர்.

   போலி முகவர்கள் சிலரின் உதவியுடன் இந்த "பகல் கொள்ளையில்' ஆம்னி பஸ் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தமிழகத்தில் இப்போது இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 700 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

  சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் ஏ.சி. மற்றும் சாதாரண கட்டணம் (ரூபாயில்...):

  திருச்சி- 340, 470; மதுரை 410, 570; கோவை 430, 580; ஈரோடு 380, 440; பெங்களூர் 435, 660;

  நெல்லை (ஏசி) 460.

  மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஆம்னி பஸ்களில் ரயில், பஸ்களை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தீபாவளி நெருங்க நெருங்க இந்தக் கூடுதல் கட்டணக் கொள்ளை மேலும் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.