ஆட்குறைப்பால் கடிதப் போக்குவரத்தில் தாமதம்
சென்னை, செப். 4: தமிழகம் முழுவதும் தபால் பட்டுவாடா பணியில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதன் எதிரொலியாக கடிதங்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்வதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. வாய்மொழி


சென்னை, செப். 4: தமிழகம் முழுவதும் தபால் பட்டுவாடா பணியில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதன் எதிரொலியாக கடிதங்கள் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்வதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்ட அதிகாரிகளின் உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் மிகப் பெரிய துறைகளில் தபால் துறையும் ஒன்று. கடிதங்கள், மணியார்டர் உள்ளிட்டவைகளை குக்கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள தபால்காரர்களின் பணி மிக முக்கியமானது.
திடீர் ஆட்குறைப்பு... இந்த முக்கியமான பணியில் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான தபால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். முக்கியமான தபால்களைக் கையாள்வது, சாதாரண கடிதங்களை எடுத்துச் செல்வது ஆகிய இரண்டு வகையான பணிகளை தபால்காரர்கள் மேற்கொள்கின்றனர்.
ஒரு இடத்துக்கு இரண்டு தபால்காரர்கள் வெவ்வேறு நேரங்களில் செல்கின்றனர். அவர்கள் இருவரும் இரண்டு முறை என ஒரு இடத்துக்கு மொத்தம் நான்கு முறை சேவை அளிக்கின்றனர்.
""ஒரு தபால்காரர் இரண்டு முறை செல்வதன் மூலம், விடுபட்ட தபால்களையும் உடனுக்குடன் மக்களிடம் சேர்க்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், ஒரு இடத்துக்கு ஒரு தபால்காரரே போதும் என்ற அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் அந்த வாய்ப்பு பறிபோய் விட்டது. இதனால், தபால்களை உரிய நேரத்தில் சேர்க்க முடியவில்லை'' என்கின்றனர் தபால் துறையைச் சேர்ந்த ஊழியர்கள்.
முறைகேட்டைத் தடுக்க... மணியார்டர் உள்ளிட்ட பணம் தொடர்பான விஷயங்களை ஒரு வாரம் வரை வைத்திருக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
""மணியார்டர் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட முகவரிக்கு எடுத்துச் செல்லும்போது, வீட்டில் ஆள் இல்லையென்றால் அதை ஒரு வாரம் வரை கையில் வைத்திருப்போம். ஆனால், இப்போது வீட்டில் ஆள் இல்லாவிட்டால் அதை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். ஒரு இடத்துக்கு ஒரு தபால்காரர் மட்டுமே பணியில் ஈடுபடும் போது, அனைத்துத் தபால்களையும் கொண்டு சேர்ப்பது கடினம். இரண்டு பேர் ஒரு இடத்தில் தபால் பணியை மேற்கொண்டபோது, விடுபட்ட தபால்களும் அன்றே பட்டுவாடா செய்யப்படும். ஆனால், ஒருவர் மட்டும் பணியில் இருக்கும் போது அது சாத்தியமில்லை'' என்கின்றனர் தபால்காரர்கள்.
முறைகேடுகளைத் தடுக்க தபால் துறை அதிகாரிகள் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருந்தாலும், தபால்கள் உரிய நேரத்தில் உரியவர்களுக்குக் கிடைக்க தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...