காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆப்பூருக்கு மாறுகிறது ஆட்டோ நகர்

சென்னை, ஏப். 27:ஆட்டோ நகர் அமைக்கும் திட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூருக்கு மாற்றப்படுகிறது. சென்னை புதுப்பேட்டை,சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கூவம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மோட்டார் உத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:47 am

ச. குமரன்

சென்னை, ஏப். 27:ஆட்டோ நகர் அமைக்கும் திட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூருக்கு மாற்றப்படுகிறது.

சென்னை புதுப்பேட்டை,சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கூவம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் மோட்டார் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் சுமார் 2,200 கடைகள் உள்ளன. அரசின் பல்வேறு துறைகள், ராணுவம் உள்ளிட்ட மத்திய பாதுகாப்புப் படைகள், போக்குவரத்துக் கழகங்கள் ஆகியவற்றின் சார்பாக ஆண்டுதோறும் பழைய மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்.

இதன்மூலம் பஸ்கள், லாரிகள், டிரக்குகள் உள்ளிட்ட கனரக மற்றும் இலகுரக வாகனங்களை உதிரிபாக விற்பனையாளர்கள் ஏலம் எடுக்கின்றனர்.

இதன்பின் இந்த வாகனங்களை பிரித்து அவற்றின் உதிரிபாகங்களை தனித்தனியே சேகரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால், புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகள் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனைத் தொழிலுக்கு தென்னிந்திய அளவில் பிரதான கேந்திரங்களாக மாறியுள்ளன. எனினும், புற்றீசல் கூட்டம் போல பெருகிய இந்தக் கடைகளால் நெரிசல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை அருகே உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்பட்டுள்ளதால் நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த உதிரிபாகக் கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நாட்டிலேயே முதன்முறையாக சென்னை அடுத்துள்ள மறைமலை நகரில் 22 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆட்டோமொபைல் தொழிலுக்கு ஏற்ற வகையில் நவீன வசதிகளுடன் ஆட்டோ நகர் அமைக்க அரசு திட்டமிட்டது.

இதுகுறித்து மோட்டார் உதிரிபாக வியாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வியாரிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும் என்று அரசு வாக்குறுதிகளை அளித்ததால், இந்தத் திட்டத்தை வியாபாரிகள் சங்கங்கள் ஏற்றன.

இதையடுத்து புதுப்பேட்டை பகுதியில் இருந்தும், தெற்கு கூவம் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த 460 கடைகளும் முதல்கட்டமாக மறைமலை நகரில் அமைக்கப்படும் ஆட்டோ நகருóககு மாற்றப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அறிவித்தார்.

இந்த நிலையில், மறைமலை நகரில் ஆட்டோ நகர் அமைக்க குறிப்பிட்ட ஒரே இடத்தில், தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறைமலை நகரில் ஆட்டோ நகர் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

44 ஏக்கரில் அமைகிறது ஆட்டோ நகர்: அதற்குப் பதிலாக செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆப்பூரில் ஆட்டோ நகரை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தப் பகுதியில் 44 ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஒரே இடத்தில் கையகப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பணிகள் நிறைவடைந்த பின் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆட்டோ நகரை அடுத்த ஓராண்டுக்குள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து மோட்டார் உதிரிபாக கடைகளும் படிப்படியாக ஆப்பூரில் அமைக்கப்படும் ஆட்டோ நகருக்கு மாற்றப்படும். இதைத் தொடர்ந்து ரிச்சி தெரு, ஜி.பி.தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள், ஆட்டோமொபைல் கடைகளையும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போல துறைமுகம்- மதுரவாயல் இடையே கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனப் போக்குவரத்துக்கு என எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்காக கூவம் கரையோரப் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இந்தப் பகுதியில் வசித்த குடிசை வாழ் மக்களுக்கு துரைப்பாக்கம், செம்மாஞ்சேரி பகுதியில் மாற்று குடியிருப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.