ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம் அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்புஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள்: கோ.சி. மணி

தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள் திறக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு...

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:27 pm IST

சென்னை, ஆக. 2: தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள் திறக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காமதேனு கூட்டுறவு மருந்துக் கடைகள் சென்னையில் ஆறு இடங்களில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. சென்னை பெசன்ட் நகரில் ஒரு கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்து கோ.சி. மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 50 மருந்து கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, சென்னையில் 6 கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

 சென்னை ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், ராயப்பேட்டை, அசோக்நகர், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இந்த மருந்தகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்குகின்றன.

÷இதே போல் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம் சார்பில் தாம்பரம், பம்மல், போரூர், செம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களிலும், பூங்காநகர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் அண்ணா நகர், திருமங்கலம், பாடி ஆகிய இடங்களிலும் இந்த கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

÷இந்த கூட்டுறவு மருந்தகங்களில் சித்தா, யுனானி, ஆங்கில மருந்துகள் உள்பட அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கும்.

÷இந்த மருந்துக் கடைகளில் அனைத்து விதமான மருந்துகளும் தரமாகவும், ஏழை மக்களின் வசதிக்காக குறைவான விலையிலும் கிடைக்கும். மேலும் இதில், தேனாம்பேட்டை மருந்துக் கடை 24 மணி நேரமும் செயல்பட இருக்கிறது. மற்ற கடைகள் காலை 9  மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

÷இந்த மருந்துக் கடைகளுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, கூட்டுறவு மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்றார் அவர்.

÷கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் ஸ்வரன் சிங், இந்திய முறை மருத்துவர்களின் கூட்டுறவு மருந்தக (இம்ப்காப்ஸ்) தலைவர் டாக்டர் ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.