ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோவையைத் தொடர்ந்து திருச்சியில்...

திருச்சி, ஆக. 8: கோவை வஉசி திடலில் மிகக் குறுகிய காலத்தில் பெரும் கூட்டத்தைத் திரட்டிக் காட்டிய அதிமுக, வரும் 14-ம் தேதி திருச்சியிலும் அதே அளவுக்கு பெரும் கூட்டத்தைத் திரட்ட தீவிரமான முயற்சிகளில் ஈடு

Updated On :20 செப்டம்பர் 2012, 8:11 am

திருச்சி, ஆக. 8: கோவை வஉசி திடலில் மிகக் குறுகிய காலத்தில் பெரும் கூட்டத்தைத் திரட்டிக் காட்டிய அதிமுக, வரும் 14-ம் தேதி திருச்சியிலும் அதே அளவுக்கு பெரும் கூட்டத்தைத் திரட்ட தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

அதிமுக பொருளாளரும் முன்னாள் "முதல்வருமான' ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், தலைமை நிலையச் செயலர் கே.ஏ. செங்கோட்டையன், எம்ஜிஆர் மன்றச் செயலர் டி. ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட மூவர் அணியினர் கடந்த ஒரு வாரமாக திருச்சி மண்டலத்தில் ஒன்றியம் வாரியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.

திருச்சி பொன்மலை அருகேயுள்ள ஜி.கார்னரில் சுமார் 4 ஏக்கர் ரயில்வே இடம் ஆர்ப்பாட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேலிடத்தில் இடம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதியும் பெறப்பட்டது.

அனுமதி பெறப்பட்ட அடுத்த நாளே மேடை அமைக்க கால்கோள் நிகழ்ச்சியும் நடந்தது. மூவர் அணியுடன், மாநகர் மாவட்ட அதிமுகவினர் உற்சாகத்துடன் இதில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மருங்காபுரி (ஒன்பது தொகுதிகளில் இரண்டு) ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளையும், கரூர் மாவட்டத்தில் கரூர் (நான்கில் ஒன்று) சட்டப்பேரவைத் தொகுதியையும், பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களில் வரகூர், ஜயங்கொண்டம் தொகுதிகளையும், திருவாரூரில் வலங்கைமான் தொகுதியையும், தஞ்சாவூரில் பேராவூரணி, ஒரத்தநாடு, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளையும், புதுக்கோட்டையில் குளத்தூர், புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளையும் கையில் வைத்திருக்கிறது அதிமுக.

இந்த மண்டலத்திலுள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் கரூர், திருச்சி, மயிலாடுதுறை அதிமுக வசம் உள்ளது. இந்த பலம் ஒன்றே போதும் ஒரு லட்சம் பேரைத் திரட்டி விடுவோம் என்கின்றனர் அதிமுகவினர்.

திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த 8 மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் முடிந்து, இப்போது ஒன்றிய அளவில் ஆலோசனை நடந்து வருகிறது. ஜெயலலிதா பேரவையினர் திருச்சியில் கூடி, தலா 100 பேர் கொண்ட தொண்டர் படையை உருவாக்க முடிவு செய்துள்ளதை அடுத்து, திருச்சி மாவட்டத்தில் ஏறத்தாழ 900 பேருக்கு வெள்ளை உடை தரித்து ஆர்ப்பாட்டத்தில் நிறுத்துவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கோவையில் அதிமுக ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, திமுகவும் அதே இடத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டியதைப் போல, திருச்சியிலும் நடத்திக் காட்டுவார்கள் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.