வரலாற்றுப் பெருமையை இழந்து வரும் வந்தவாசி கோட்டை!
வந்தவாசி: சிதிலமடைந்து அதன் வரலாற்றுப் பெருமையை இழந்து வரும் வந்தவாசி கோட்டையை புனரமைத்து போர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரியில் பிரெஞ்ச் கவர்னராக டி


வந்தவாசி: சிதிலமடைந்து அதன் வரலாற்றுப் பெருமையை இழந்து வரும் வந்தவாசி கோட்டையை புனரமைத்து போர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
புதுச்சேரியில் பிரெஞ்ச் கவர்னராக டியூப்ளெக்ஸ் என்பவர் கி.பி.1742-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் பிரெஞ்ச் ஆதிக்கத்தை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரெஞ்ச்-இந்திய வாணிபத்தை பெருமளவில் ஊக்குவித்து வந்தார். அப்போது வந்தவாசி கோட்டை பிரெஞ்ச் படை வசமிருந்தது.
இந்தக் கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேயப் படையினர் கி.பி.1752-ல் மேஜர் லாரன்ஸ் தலைமையிலும், கி.பி.1757-ல் கர்னல் ஆல்டர் தலைமையிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ஆங்கிலேயப் படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
பின்னர் கி.பி.1760-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி தளபதி சர் அயர்கூட் தலைமையில் ஆங்கிலேயப் படை மீண்டும் வந்தவாசி கோட்டையைத் தாக்கியது. இதில் தளபதி கவுண்ட் டி லாலி தலைமையிலான பிரெஞ்ச் படையினருக்கும், தளபதி சர் அயர்கூட் தலைமையிலான ஆங்கிலேய படையினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
இதில் ஆங்கிலேய படையில் 1,700 பேரும், பிரெஞ்ச் படையில் 2,000 பேரும் போரிட்டனர். இதில் ஆங்கிலேயப் படை வெற்றி பெற்றது. இதையடுத்து வந்தவாசி கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றது.
இந்தப் போரில் வெற்றி பெற்றதன் மூலம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் வலுப்பெற்று இந்தியாவில் அவர்களை முழுமையான ஆட்சியாளர்களாக மாற்றியது என்றே கூறலாம்.
வந்தவாசி பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தின் பின்புறம் இந்த கோட்டை உள்ளது. இது சுமார் ஒன்றரை கி.மீ. நீளத்தில் நீள்சதுர வடிவில் இந்து கலைப் பாணியில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கோட்டையை சுற்றி அகழியும், கோட்டையினுள் குதிரை லாயமும் இருந்துள்ளன. இக்கோட்டையிலிருந்து சேத்பட் வழியாக செஞ்சிக் கோட்டைக்குச் செல்ல சுரங்கபாதை ஒன்று இருந்ததாகவும் நம்பப்படுகிறது.
சிதைவுற்ற நிலையில் கோட்டை: போர் முக்கியத்துவம் பெற்ற இக்கோட்டை தற்போது சிதைவுற்ற நிலையில் உள்ளது. இக்கோட்டையின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் சிறிய பகுதியிலும் உள்ளே செல்ல முடியாதபடி முட்புதர்கள் உள்ளன. அகழிகளும் வறண்டு காணப்படுகின்றன. வந்தவாசி கோட்டை என்று சொல்லிக் கொள்வதற்கு தற்போது இடிந்த செங்கல் சுவர்கள் மட்டுமே சாட்சியாக உள்ளன.
மேலும் ஆங்கிலேய-பிரெஞ்ச் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ஒன்று தொல்லியல்துறை சார்பில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் முன் முள்வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பீரங்கியைச் சுற்றிலும் புல் முளைத்து பராமரிப்பிலாமல் உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இக்கோட்டை, பள்ளி மாணவர்களின் சுற்றுலா தலமாக இருந்தது. குதிரை லாயம், சுரங்கப் பாதையின் வெளிப்புற பகுதி ஆகியவற்றை அவர்கள் கண்டுகளித்து வந்தனர். ஆனால், இப்போதைய பள்ளி மாணவர்களுக்கு வந்தவாசி கோட்டை என்பது பெயரளவுக்கு மட்டுமே அறிமுகமாகியுள்ளது.
போர் நடந்து 250 ஆண்டுகள் முடிந்ததையொட்டி மாவட்ட நிர்வாகம் விழா நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதற்கு முன் இந்த கோட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோட்டையை முற்றிலும் புனரமைக்க வேண்டும். போர் நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என்பதே வந்தவாசி மக்களின் விருப்பமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...