குரூப் 2 தேர்வை நடத்துவதில் சிக்கல்?
சென்னை, ஜன.31: அறிவித்த தேதியில் குரூப் 2 தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் பிப்ரவரி 15}ம் தேதி இடமாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன் தேர்வுக்கான விண்


சென்னை, ஜன.31: அறிவித்த தேதியில் குரூப் 2 தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் பிப்ரவரி 15}ம் தேதி இடமாற்றம் செய்யப்படுகிறது.
அத்துடன் தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பிரிக்கும் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வுகள் "குரூப் 2' பிரிவுக்குள் வருகின்றன. இந்தத் தேர்வு ஏப்ரல் 11}ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4.3 லட்சம் பேர்: குரூப் 2 தேர்வு எழுத கல்வித் தகுதி இளநிலை பட்டம் ஆகும். இந்தத் தேர்வை எழுத தமிழகம் முழுவதிலும் இருந்து 4.3 லட்சம் பேர் மனுச் செய்துள்ளனர்.
தேர்வை நடத்துவதற்கான முதல் கட்டப் பணிகளில் அரசுப் பணியாளர் தேர்வாணைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தபாலில் வந்துள்ள விண்ணப்பங்களைப் பிரித்து அவற்றை ஒழுங்குபடுத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
20 பிரிவுகள் மட்டும்: இதன்பின், விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடைபெறும். இந்தப் பணிக்காக தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பிரிவு அலுவலர், உதவிப் பிரிவு அலுவலர் அல்லது அலுவலக உதவியாளர் நியமிக்கப்படுவார். 20 பிரிவுகளில் 40 பேர் பணியாற்றுவர்.
""விண்ணப்பங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் தட்டச்சர்களும், அலுவலக உதவியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான வேலை இது அல்ல. "மஸ்தூர்' என்று சொல்லக் கூடிய உதவியாளர்கள்தான் செய்ய வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறையால் விண்ணப்பங்களைப் பிரித்து சீல் இடும் பணியை தட்டச்சர்களே மேற்கொண்டு வருகின்றனர்'' என்கின்றனர் தேர்வாணைய ஊழியர்கள்.
விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியில் 20 பிரிவுகள் போதாதது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
""கடந்த ஆண்டு 3.3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவற்றைப் பரிசீலிக்க 25 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
ஆனால், இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் அதிகரித்து, 4.3 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், விண்ணப்பங்களைப் பரிசீலிக்க 20 பிரிவுகளை மட்டுமே ஏற்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. அதிலும், 5 பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் தேர்வுக்கூடங்களை அடையாளம் காணுவது போன்ற பணிகளில் ஈடுபடுவர். இதனால், 4.3 லட்சம் விண்ணப்பங்களை 15 பிரிவுகளைச் சேர்ந்த 30 பேர் மட்டுமே பரிசீலிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது'' என்று வேதனையுடன் கூறுகின்றனர் தேர்வாணைய அதிகாரிகள்.
இடமாற்றத்தால்: இதனிடையே, தேர்வாணைய அலுவலகம் பிப்ரவரி 15}ம் தேதி இடமாற்றம் செய்யப்படுவதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவைக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் இடிக்கப்படுகிறது.
""அலுவலகம் பிப்ரவரி 15}ம் தேதி காலி செய்யப்படுகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே யாரும் விடுமுறையில் செல்லக் கூடாது என்ற சுற்றறிக்கையை தேர்வாணைய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்படுவதால் தங்கள் வசம் உள்ள அத்தனை விண்ணப்பங்கள், கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியில் 15 பிரிவுகள் மட்டுமே ஈடுபடுத்தப்பட உள்ளன. 4.3 லட்சம் என்றால் ஒவ்வொரு பிரிவுக்கும் 29 ஆயிரம் விண்ணப்பங்கள் பிரித்து அளிக்கப்படும். இடமாற்றம் செய்வதால் இந்த விண்ணப்பங்களின் நிலை கேள்விக்குறியாகும்'' என்று தேர்வாணைய வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
பிரிவுகளை அதிகரிக்க வேண்டும்: குரூப் 2 தேர்வை சிக்கல் இன்றி நடத்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பிரிவுகளை அதிகரிக்க வேண்டும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குரூப் 2 தேர்வை நடத்தி முடித்த பின் இடமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக காலி செய்யும்போது விண்ணப்பங்கள் காணாமல் போய் தேர்வர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்று தேர்வாணைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...