பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

அரசு உயர் அதிகாரிகள் சூட்கேஸ் வாங்க ரூ.5 ஆயிரம்

சென்னை, பிப்.9: அரசு உயர் அதிகாரிகள் சூட்கேஸ் வாங்கிக் கொள்வதற்கான தொகை ரூ.440}லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் சார்புச் செயலாளர் முதல் கூடுதல் செயலாளர் நிலைக்கு மேல் உள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:12 am

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, பிப்.9: அரசு உயர் அதிகாரிகள் சூட்கேஸ் வாங்கிக் கொள்வதற்கான தொகை ரூ.440}லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் சார்புச் செயலாளர் முதல் கூடுதல் செயலாளர் நிலைக்கு மேல் உள்ளவர்களுக்கு வரை இந்தச் சலுகை பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பல்வேறு படிகள், சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அவற்றில், எழுதுபொருள், சூட்கேஸ் போன்ற பொருள்கள் வாங்குவதற்கான படிகளும் அடங்கும்.

அரசு அதிகாரி ஒருவருக்கு சூட்கேஸ் பெற்றுக் கொள்வற்கான தொகை ரூ.440 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தொகை இப்போது அதிகாரிகளின் தகுதி நிலைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.

யார் யாருக்குக் கிடைக்கும்: சார்பு, துணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும், இணை, கூடுதல் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3,500}ம் வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கூடுதல் செயலாளர் நிலையில் மேல் உள்ளவர்களுக்கு இத் தொகை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

துறைச் செயலாளர்களும்: சூட்கேஸ் வாங்கிக் கொள்ள ஒரு அதிகாரிக்கு ரூ.440 என்கிற உச்ச வரம்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

பணி பதிவேட்டில்: ஒரு அதிகாரி சூட்கேஸ் வாங்கியதற்கான தகவல் அவரது பணி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். சூட்கேûஸ பணிக் காலத்துக்குப் பிறகும் வைத்துக் கொள்ளலாம். அதில், ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கான செலவை சம்பந்தப்பட்ட அதிகாரியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு அதிகாரி ஒருவர் மாற்றப்படும்போது, சூட்கேஸ் பெற்றுக் கொண்டதற்கான தகவலை அவர் மாற்றப்படும் துறையிடம் சம்பந்தப்பட்ட துறை தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.