புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல மணி நேரம் தொடரும் "வி.ஐ.பி.' பாதுகாப்புப் பணி: பரிதவிக்கும் பெண் போலீஸôர்!

சென்னை, மார்ச் 28: முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கான பணியில் தொடர்ந்து பல மணி நேரம் ஈடுபடும் நூற்றுக்கணக்கான பெண் போலீஸôர் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மட்டுமன்ற

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:43 pm

ச. குமரன்

சென்னை, மார்ச் 28: முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கான பணியில் தொடர்ந்து பல மணி நேரம் ஈடுபடும் நூற்றுக்கணக்கான பெண் போலீஸôர் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் இதே நிலை தொடர்கிறது.

சென்னையில் மிகவும் முக்கிய பிரமுகர்களின் வருகை, விழாக்கள், கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் பல்வேறு போராட்டங்கள், தேர்தல், கோயில் திருவிழாக்கள், ரயில், பஸ் நிலையங்களில் மட்டுமே பெண் போலீஸôர் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆவடி வைஷ்ணவி நகரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 5}வது அணியைச் சேர்ந்த 1,000}க்கும் மேற்பட்ட பெண் போலீஸôருக்கு பெரும்பாலும் "பந்தோபஸ்து' எனப்படும் பாதுகாப்புப் பணி தினமும் ஒதுக்கப்படுகிறது.

இவர்களுடன், விஐபி}க்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஆயுதப் படைப் பிரிவு மற்றும் மாநகர காவல் துறையைச் சேர்ந்த பெண் போலீஸôரும் இப்போது ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆரம்பகட்ட களப் பயிற்சி முடித்த பின், மேல்நிலைப் பள்ளிக்கூட மாணவிகள் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த பெண் போலீஸôருக்கு முதல் பணியே, விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தான்.

முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் இல்லம், தலைமைச் செயலகம் செல்லும் வழி நெடுகிலும் பாதுகாப்புப் பணியில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கும்... இப்போது தனியார் நிறுவனங்கள் சார்பாக பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்துடனும் வருவாய் ஈட்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான பாதுகாப்புப் பணியிலும் ஏராளமான பெண் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல், விளையாட்டு மைதானம் என தினமும் 3 "ஷிஃப்ட்' என இரவு பகலாகவும் பெண் போலீஸôர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், கழிப்பறை வசதி இல்லாததால் இவர்களுக்கு இயற்கை தொந்தரவுகளைக் கூட சமாளிக்க இயலாமல் தினமும் சொல்ல முடியாத அளவுக்கு அவதிப்படுகின்றனர்.

தங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கும் பெண் போலீஸôருக்கு சாதாரணமாக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூட ஐபிஎல் நிர்வாகிகள் வழங்க முன்வரவில்லை.

நடமாடும் கழிப்பறை வசதி: பெண் போலீஸôரால் இயக்கப்படும் ஒரே ஒரு நடமாடும் கழிப்பறை வாகனம் (மொபைல் டாய்லட்) உள்ளது. எனினும், இந்த வாகனமும் அடிக்கடி செயல்படாத நிலையில் உள்ளது.

கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மெரீனா கடற்கரை}காமராஜர் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பெண் போலீஸôருக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகிப்பதிலும் இப்போது தேக்க நிலை உள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகளிர் சிறப்பு காவல் அணியின் பாசறையில் (பேரக்ஸ்)இருந்து பெண் போலீஸôருக்கு தினமும் 3 வேளை உணவு விநியோகிக்கப்படுகிறது.

இதில் தாமதம் ஏற்பட்டால் பெண் போலீஸôர் வேறு வழியின்றி நடைபாதைக் கடைகளிலும், "கையேந்தி பவன்களிலும்' தஞ்சம் புகும் நிலை உள்ளது.

தினசரி வழங்கப்படும் உணவுக்காக, பெண் போலீஸôரின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் ரூ. 300}க்கும் மேல் பிடித்தம் செய்யப்படுகிறது.

எனினும் அன்றாடப் பணிகளில் தங்களுக்கு நேரும் இடையூறுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் குறைதீர்க்கும் வாய்ப்புகள் பெண் போலீஸôருக்கு வழங்கப்படுவது இல்லை.

"லத்தி' என்ற மூங்கில் குச்சியை தவிர ஆயுதங்கள் ஏதும் இல்லாமல், சுழற்சி முறையில் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் போலீஸôருக்கு இதற்கான சிறப்பு படித்தொகை உள்ளிட்ட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

எனவே ஆயுள் காப்பீடு போன்ற தொலைநோக்கு திட்டங்களுடன் அடிப்படை வசதிகளையும் வழங்க அரசு முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு பெண் போலீஸôர் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.