டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐ.டி.​ நிறுவனங்கள் பெயரால் இளைஞர்களை ஏமாற்றும் போலி நபர்கள்

சென்னை,மார்ச் 29: பிரபல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் பெயரைப் பயன்படுத்தி,வேலை தேடும் ஐ.டி. பட்டதாரிகளை ஏமாற்றும் போலி நபர்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான ஊதியத்துடன் இளைஞர்களு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:45 pm

வி.தேவதாசன்

சென்னை,மார்ச் 29: பிரபல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் பெயரைப் பயன்படுத்தி,வேலை தேடும் ஐ.டி. பட்டதாரிகளை ஏமாற்றும் போலி நபர்கள் அதிகரித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான ஊதியத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை விளங்குகிறது.

எனவே உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஐ.டி. சார்ந்த கல்விக்கே முன்னுரிமை தந்து வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 454 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 1,600 கலை,அறிவியல் கல்லூரிகளில் ஐ.டி. சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாணவர்கள் படிப்பை முடித்து வெளி வருகின்றனர். ஐ.டி. நிறுவனங்களில் வேலை தேடுவதில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

பயிற்சி மையங்கள்: இந்த சூழலைப் பயன்படுத்தி ஐ.டி. படித்த இளைஞர்களை பலர் ஏமாற்றி வருகின்றனர். முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் நேர்முகத் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள பயிற்சி என்ற பெயரில் ஏராளமான நிறுவனங்கள் தோன்றின.

"தங்கள் நிறுவனத்தில் பயின்றால் வேலை உறுதி' என்ற வாக்குறுதியோடு சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் பலர் ஐ.டி. பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களைத் தவிர,மற்ற பயிற்சி மையங்களில் பயில்வதால் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதே எதார்த்த நிலையாக உள்ளது.

இ-மெயில் மோசடி:இந்நிலையில் மேலும் ஒரு புது வகையான மோசடி இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் ஒருவருக்கு,பெங்களூரில் இருந்து ஒரு இ-மெயில் வந்தது. முன்னணி ஐ.டி. நிறுவனம் ஒன்றின் மனித வள மேம்பாட்டுத் துறை பெயரில் அந்த மெயில் வந்தது.

நிறுவனத்தில் ஐ.டி. உள்பட பல பிரிவுகளுக்கு ஆட்களை நியமிப்பதற்காக 32 பேரின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதில் அந்தப் பெண்ணும் ஒருவர் என்றும் கூறப்பட்டிருந்தது.

மாதம் ரூ.26 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் கிடைக்கும். ஏப்ரல் இரண்டாவது வாரம் பெங்களூரில் நேர்முகத் தேர்வு நடைபெறும். அதற்கு முன்னதாகவே பணி நியமன ஆணையும்,பெங்களூர் வருவதற்கான விமான டிக்கெட்டும் கூரியரில் அனுப்பி வைக்கப்படும் என்றெல்லாம் அதில் கூறப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு முன்னதாக நிறுவனத்துக்கு முன்பணமாக ரூ.7,125 அனுப்ப வேண்டும் என்றும்,நேர்முகத் தேர்வுக்குப் பின் இத்தொகை திருப்பி தரப்படும் என்றும் அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வங்கி எண்ணைக் குறிப்பிட்டு,அதில் மனோஜ்குமார் என்பவர் பெயரில் பணத்தைச் செலுத்துமாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் இது மோசடி செயல் என்று ஐ.டி. நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து "நாஸ்கம்' அமைப்பின் தென் மண்டல இயக்குநர் கே. புருஷோத்தமன் கூறியதாவது:

எந்த ஐ.டி. நிறுவனமும் வேலை தேடி வரும் இளைஞர்களிடம் இருந்து எதற்காகவும் பணம் வசூலிப்பதில்லை. நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அவரவர் சொந்த பொறுப்பில்தான் வர வேண்டுமே தவிர,யாருக்கும் விமான டிக்கெட்டோ,ரயில் டிக்கெட்டோ அனுப்புவதில்லை.

மேலும்,நேர்முகத் தேர்வுக்கு முன்பாக,விண்ணப்பத்தை பார்த்துவிட்டு மட்டுமே எந்த நிறுவனமும் பணி நியமன ஆணை வழங்குவதில்லை.

ஆனால்,இப்போது வேலை தேடும் இளைஞர்களை ஏமாற்றும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான இ-மெயில்கள் அனுப்பப்படுகின்றன. எனவே,இதுபோன்ற இ-மெயில்கள்,எஸ்.எம்.எஸ்.களை நம்பி யாரும் ஏமாறக் கூடாது. இது போன்ற மெயில்கள் யாருக்காவது வந்தால் அது குறித்து காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.